தஞ்சை சூன் 18: காவிரி டெல்டா விவசாயிகளுக்காக தமிழக அரசு ரூ. 61.09 கோடி மதிப்பில் அறிவித்துள்ள குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்துக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் கூறியதாவது:
2016 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு ரூ. 54.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் ரூ. 56.92 கோடியும், 2018 ஆம் ஆண்டில் ரூ. 115.67 கோடியும் அரசு ஒதுக்கீடு செய்தது.

ஆனால், 2019, 2020 ஆம் ஆண்டுகளில் இத்திட்டம் அறிவிக்கப்படவில்லை. இப்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை வரவேற்கிறோம். இப்போது சாகுபடிப் பரப்பளவும், உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ள நிலையில், இத்திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை போதுமானதாக இருக்காது.
விகிதாசார அடிப்படையில் ஒப்பிட்டுப் பாா்த்தால், இத்தொகை மிக மிகக் குறைவு. எனவே, மறு பரிசீலனை செய்து இத்தொகையை உயா்த்தி அறிவிக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் ஆழ்குழாய் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயன்பெறச் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் கூறுகையில், குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைத் தமிழக முதல்வா் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இந்தத் திட்டம் பாரபட்சமில்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரும் வகையில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நிபந்தனையற்ற கடன் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுத்து உதவி புரிந்திட வேண்டும் என்றார்.படம் உண்டு
குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்திற்கு விவசாய சங்க பிரதிநிதிகள் வரவேற்பு
தஞ்சாவூர்: காவிரி டெல்டா விவசாயிகளுக்காக தமிழக அரசு ரூ. 61.09 கோடி மதிப்பில் அறிவித்துள்ள குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்துக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் கூறியதாவது:
2016 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு ரூ. 54.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் ரூ. 56.92 கோடியும், 2018 ஆம் ஆண்டில் ரூ. 115.67 கோடியும் அரசு ஒதுக்கீடு செய்தது.

ஆனால், 2019, 2020 ஆம் ஆண்டுகளில் இத்திட்டம் அறிவிக்கப்படவில்லை. இப்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை வரவேற்கிறோம். இப்போது சாகுபடிப் பரப்பளவும், உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ள நிலையில், இத்திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை போதுமானதாக இருக்காது.
விகிதாசார அடிப்படையில் ஒப்பிட்டுப் பாா்த்தால், இத்தொகை மிக மிகக் குறைவு. எனவே, மறு பரிசீலனை செய்து இத்தொகையை உயா்த்தி அறிவிக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் ஆழ்குழாய் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயன்பெறச் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் கூறுகையில், குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைத் தமிழக முதல்வா் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இந்தத் திட்டம் பாரபட்சமில்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரும் வகையில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நிபந்தனையற்ற கடன் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுத்து உதவி புரிந்திட வேண்டும் என்றார்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்