தஞ்சாவூர் ஜன.11 – பட்டுக்கோட்டை அழகிரி நினைவிடம் புதுப்பிக்கும் பணிக்கு ஏஐடியூசி வரவேற்பு! தஞ்சாவூர் ராஜகோரி இடுகாட்டில் உள்ள அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி கல்லறை புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பராமரிப்பின்றி முக்கியத்துவம் வாய்ந்த இந்த போராளியின் நினைவு கல்லறை இப்படி இருப்பது மிகுந்த வருத்தத்தை அளித்தது. புதுப்பிக்க வேண்டும் என்ற ஏஐடியூசியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றாத நிலை தொடர்ந்தது. தற்பொழுது தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திரு க. சரவணகுமார் தஞ்சை மாநகரில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற சூழ்நிலையில் உணர்வு பூர்வமாக முன்வந்து அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி கல்லறையை புதுப்பிக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை வரவேற்கிறோம்.

ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் மாநில செயலாளர் சி.சந்திரகுமார், மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம், மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், மாவட்ட துணைச்செயலாளர் துரை .மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஆர் .பி. முத்துக்குமரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பட்டுக்கோட்டை அழகிரி கல்லறை பராமரிப்பு பணி நடைபெறுவதை பார்த்து வந்தது மனநிறைவை அளிக்கிறது. இந்த அரிய பணிக்கு முன்முயற்சி மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு அனைவரின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/