தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பல்வேறு திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேல வீதி, தெற்கு வீதி, வடக்குவீதி, கீழராஜவீதி மற்றும் தெற்கு அலங்கம் ஆகிய வீதிகளில் சாலை சீரமைக்கப்படுகிறது.

மேலும் சாலைகளில் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டு அதன் மீது நடைபாதைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தஞ்சை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மேல வீதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘புரட்சித் தலைவி அம்மா ஆலயம்’ என்ற பெயரில் கோயில் கட்டப்பட்டிருந்தது.

இந்த கோயில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த கோயிலை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் இந்த கோவில் இடித்து அகற்றப்பட்டது.

நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/