தஞ்சாவூர் ஆக 06: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெரிய கடைத்தெரு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அலுவலா்கள், போக்குவரத்து போலீசார் அகற்றினா்.
கும்பகோணம் பெரிய கடைத்தெரு பகுதியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இத்தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாக முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
தொடா்ந்து, கும்பகோணம் நகராட்சி அலுவலா்கள், போக்குவரத்து போலீசார் முன்னிலையில், நகராட்சிப் பணியாளா்கள் கும்பகோணம் பெரிய கடைத்தெரு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/