தஞ்சை சூலை 15 : தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுறை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கேட்பு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது.

தஞ்சை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ஆகிய நான்கு மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளாண்மைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தொடர்பாகக் கருத்து கேட்பு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.

இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை வகித்து விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார், இதில் விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது;

நெல் கொள்முதல் நிலையம் மூலம் ஒரு லட்சத்து 57 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதில் இதுவரை 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாகக் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மழை பெய்வதால் தார்பாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில் வேளாண்துறை ஆணையர் சமயமூர்த்தி, இயக்குநர் அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், துறை அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/