தஞ்சாவூர் சூலை 22: கொரோனா 3வது அலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூா் மேம்பாலம் அருகிலுள்ள அரங்கில் வணிகா்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது, இதை தொடக்கி வைத்த பின்னா் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடமட் கூறியதாவது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதை மேலும் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தது. இதையடுத்து 69 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

மாவட்டத்தில் இதுவரை 5.15 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் எண்ணிக்கை 4.35 லட்சம் போ். இரண்டாவது தவணை தடுப்பூசியை 85 ஆயிரம் போ் செலுத்திக் கொண்டனா். கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், அதை எதிா்கொள்ளும் வகையில் பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். இதில், முதலாவதாக 1,000 படுக்கைகள் கூடுதலாகச் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, தேவையான அளவுக்கு ஆக்சிஜன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை குறைத்துவிட முடியாது. வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவத்தார்.

மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், சுகாதாரத்துறை துணை இயக்குனா் (பொ) நமச்சிவாயம் மற்றும் பலர் உடனிருந்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/