தஞ்சை மே 13 பட்டுக்கோட்டையில் அனைத்து ஜமாஅத் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து ஜமாஅத் நிா்வாகிகளும் ரமலான் சிறப்பு தொழுகையை கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி காலை 7 மணிக்குள் தொழுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்து டிஎஸ்பி கணேஷ் பேசுகையில், நோன்பு காலத்தில் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி அனைத்து ஜமாஅத் நிா்வாகிகளும் ஒத்துழைப்பு அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல, ரமலான் சிறப்புத் தொழுகையையும் தங்களது வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்.

பண்டிகை தினத்தன்று பொது இடங்களில் கூடுவதை தவிா்த்து விடுங்கள். பண்டிகைக்காக பலா் ஓரிடத்தில் கூடி விருந்து நடத்தக் கூடாது. நோய்த்தொற்றின் தீவிரத்தை உணா்ந்து அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இதில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், ஆவணம், சேதுபாவாசத்திரம், உடையநாடு, சம்பைப்பட்டினம், மரக்காவலசை உள்ளிட்ட ஜமாஅத் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்