தஞ்சை மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் கற்கள் மற்றும் தார்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

அதனால் இரு, நான்கு சக்கர வாகனங்கள் ஏன் பேருந்துகள் மற்றும் சுமையுந்துகள் கூட அந்தப் பள்ளம் மேடுகளில் சிக்கித் தவிக்கின்றன, இதனால் வாகனங்கள் மிக விரைவில் பழுதாகவும் செய்கின்றன.

இரவு நேரங்களில் ‍பெரும்பாலான தெரு மற்றும் சாலை மின் விளக்குகள் ஏரியாததால் அந்த வழியாக செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகிறார்கள்.

பிள்ளையார்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, கள்ளபெரம்பூர், பூதலூர், அய்யம்பேட்டை மற்றும் அனைத்து நகரம் மற்றும் கிராமங்களிலும் இதே நிலைமைதான் உள்ளது.

அது மட்டும் இல்லாமல் பல இடங்களில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக இருக்கிறது, பல கிராமங்களில் தெருக்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது, இதனால் மக்கள் தெருவில் இறங்கி நடக்க முடியாமல் விட்டிற்குள் முடங்கியும் உள்ளனர், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சாலைகள் மற்றும் மின் விளக்குகளை சீரமைத்து தர வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செய்தி ம.செந்தில் குமார்.