கும்பகோணம் நவ 03: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கும்பகோணத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் ரெயில், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் பஸ் மற்றும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் ரெயில் பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கும்பகோணத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் பெட்டிகளில் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது அந்த ரெயில் பெட்டிகளில் கும்பகோணம் ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் மற்றும் போலீசார் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

திருச்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட மோப்பநாய் மேக்ஸ் உதவியுடன் ரெயில் பெட்டிகளில் அணுகுண்டு மற்றும் எளிதில் தீ பிடிக்க கூடிய பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். ரெயில் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்வதற்காக இந்த ஆய்வு பணிக்கு மேற்கொள்ளப்பட்டதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

மேலும் ரயிலில் பட்டாசு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரெயில் பயணிகள் எடுத்து செல்லக்கூடாது எனவும் கொரோனா பரவலை தடுக்க அரசு வகுத்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தியும் ரெயில் பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/