தஞ்சாவூர் ஆக 01: தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.2.50 கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் விற்பனைக்குழுச் செயலா் கணேஷ்பாபு தலைமையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் பிரியமாலினி முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

பாபநாசம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த 1450 விவசாயிகள் 3300 குவிண்டால் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்தனா்.

சேலம், கடலூா், விழுப்புரம், தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்று, பருத்தியைக் கொள்முதல் செய்தனா். குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.8118-க்கும், குறைந்தபட்சமாக ரூ.7069-க்கும், சராசரியாக ரூ.7656-க்கும் ஏலம் போனது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/