அரசு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது!.

தஞ்சாவூர் ஆக 7 -அரசு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தொழில் பிரிவுகளை இன்று முதல் இணைய தளத்தில் தேர்வு செய்து உறுதி செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 ஆம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு பெறப்பட்ட விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு 8 மற்றும் பத்தாம் வகுப்பு தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து விண்ணப்பதாரர்கள் இன்று ஏழாம் தேதி முதல் வரும் 9 ஆம் தேதிக்குள் தங்களது லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி < www.skilltraing.tn.gov.in> என்ற இணையதளத்தில் அவரவர் விருப்பப்படி 15 தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில் பிரிவுகளை விருப்ப அடிப்படையில் தேர்வு செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முன்னுரிமை கோரும் விண்ணப்பதாரர்கள் வரும் 12ஆம் தேதி பொதுபிரிவினர் வரும் 14ம் தேதிகளில் இணையதளம் மூலமாக சேர்க்கை கட்டணத்தை செலுத்தி சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கலந்தாய்வு தொடர்பாக மேலும் தேவைப்படும் விவரங்களைத் துணை இயக்குனர் முதல்வர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தஞ்சை என்ற முகவரியை அணுகலாம் 9994043023,9840950504 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம் என அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/