ஜனவரி-8 தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் இடையிறுப்பு ஊராட்சி மனப்படுகை பிள்ளையார்கோவில்தெருவில் இருந்து செல்லும் மந்தவெளி சாலை சேறும் சகதியுமாக குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதை சீரமைக்க கோரி போராட்டம்.
தொடர்ந்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழையில் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டு குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சாலையை உடன் சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமையில் சேறும் சகதியுமான மந்தவெளி சாலையில் வாழைக்கன்று நட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாலு, எஸ்.பி.சோமு, கிளை நிர்வாகிகள் எஸ்.அய்யாசாமி, எம்.துரைசத்தியசீலன், பி.கோவிந்தசாமி மற்றும் கிராம வாசிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்