தஞ்சை சூலை 05: இயற்கை பேரிடரை காக்கும் வகையில் கிராமப்பகுதிகளுக்கு அரணாக விளங்கும் அலையாத்திக்காடுகளை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதி கடற்கரையோரங்களில் அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அலையாத்தி காடுகள் உள்ளன. சுனாமி போன்ற இயற்கை பேரிடரிலிருந்து மீனவ கிராமங்களை காப்பாற்றும் பாதுகாப்பு அரணாக அலையாத்திக்க காடுகள் இருந்து வருகிறது.

கடந்த சுனாமி தாக்குதலின் போது நாகை உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆனால் திருவாரூர் மாவட்டம் கடற்பகுதி முத்துப்பேட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கடல் பகுதியான அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் ஆகிய கடற்கரையோர கிராமங்களில் வசிப்பவர்களை சுனாமியிலிருந்து இந்த அலையாத்திக்காடுகள் காப்பாற்றின.

கடுமையான வேகத்துடன் இருந்து வந்த பேரலையை அலையாத்தி காடுகள் தடுத்தன. இந்நிலையில் சுனாமியால் அசைக்கமுடியாத அலையாத்தி மரங்கள் கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி சேதமடைந்துள்ளன.

இதையடுத்து அமைக்கப்பட்ட சமூக நல காடுகளில் உள்ள ஏராளமான மரங்களும் வேரோடு சாய்ந்து போய்விட்டன https://www.bbc.com/tamil/india-44145108. இதனால் இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர். எனவே இயற்கை இடர்பாடுகள் இருந்து கரையோறும் வசிக்கும் மக்களுக்கு காக்கும் அலையாத்தி காடுகள் மற்றும் சமூக நல காடுகள் ஆகியவற்றைப் பராமரிக்க துறை ரீதியில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today