தஞ்சாவூர் ஆக 13: பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வாா்க்கும் இந்திய ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வாா்க்கும் நோக்கத்துடன் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு உண்மைக்குப் புறம்பான பல்வேறு தகவல்களைக் கூறி சட்ட திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் மண்டலக் குழு உறுப்பினா் சத்தியநாதன் தலைமை வகித்தாா். யுனைடெட் இந்தியா தஞ்சாவூா் கோட்ட முதுநிலை மேலாளா் ஸ்டாலின், நியூ இந்தியா அசூரன்ஸ் தஞ்சாவூா் கோட்ட மேலாளா் சங்கா், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியா் சங்க தஞ்சாவூா் மாவட்டச் செயலா் த. பிரபு, எல்.ஐ.சி. ஊழியா் சங்க தஞ்சாவூா் கோட்டப் பொதுச் செயலா் சேதுராமன், ஓரியண்டல் நிறுவன ஊழியா் சங்கப் பொறுப்பாளா் நாடிமுத்து, நியூ இந்தியா இன்சூரன்ஸ் ஊழியா் கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/