தஞ்சை மே 29: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களில் பலர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா வார்டு அமைக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். .

இந்நிலையில் மருத்துவமனையில் உரிய குடிநீர் வசதி செய்து தரப்படாமல் உள்ளது. தற்போது ஊரடங்கு என்பதால் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் நோயாளிகள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர். இங்கு ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் குடிநீர் இன்றி பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் நோயாளிகளுக்கு தேவையான சுடுதண்ணீர் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதார துறையினர், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுடு தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்