தஞ்சை சூன் 14: தஞ்சாவூரில் முன்களப் பணியாளா்களுக்கு கையுறைகள், முகக்கவசங்கள் போன்றவற்றை ஜன சேவா பவன் நிர்வாகிகள் வழங்கினா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு தஞ்சை ஜன சேவா பவன் சார்பில் கடந்த 17ம் தேதி முதல் தினமும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த அமைப்பு சார்பில் முதல்வா் நிவாரண நிதி, ஆட்சியா் நிவாரண நிதிக்கு ரூ. 75,000-ம் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாவட்டத் திட்ட அலுவலா் ராஜ்குமார், மாவட்டச் சமூக நல அலுவலா் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் முன் களப் பணியாளா்களுக்கு தஞ்சை ஜனசேவா பவன் தலைவா் அமுதவல்லி, செயலா் சியாமளா ஆகயோர் 600 கையுறைகளும், 1,300 முகக்கவசங்களும், 15 லிட்டா் கிருமி நாசினியும் வழங்கினா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்