தஞ்சை மே 13: பொம்மலாட்ட கலைஞர்கள் 60 நபர்களுக்கு இராம கிருஷ்ணா மடம் சார்பில் அரிசி உட்பட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக வேலையின்றி பொம்மலாட்ட கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாததால் பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு வருமானம் இன்றி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளனர்.

அந்தவகையில் கும்பகோணம் நகரில் பொம்மலாட்டக் கலையில் ஈடுபட்டுள்ள 60 நபர்களுக்கு ராமகிருஷ்ண மடம் சார்பில் தலா ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்