தஞ்சாவூர் ஆக 20 சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூபாய் 165 விலை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விலை உயர்வை கண்டித்தும் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டர்களை தட்டு ரிக்ஷாவில் தூக்கி வைத்து அதற்கு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத பிரதமர் மோடி பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்ட தலைவர் கலைச்செல்வி மாநகர செயலாளர் வசந்தி தஞ்சை ஒன்றிய செயலாளர் வனரோஜா ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் மலர்கொடி அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் வெற்றிச்செல்வி மாவட்ட நிர்வாகிகள் மலர்கொடி பைந்தமிழ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை ஒன்றிய செயலாளர் மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/