தஞ்சை சூன் 23 சென்னை: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை…தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவலால் நிகழ்வாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே தொடர்கிறது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பிற்கு 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
இருப்பினும், பல பள்ளிகளில் முழுக் கட்டணமும் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
சிபிஎஸ்இ, மெட்ரிக், ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ மற்றும் ஐபி பள்ளிகளில் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். மேலும், கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்