தஞ்சாவூா்: தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகள், விதை, பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் உரம், விதை, பூச்சி மருந்து விற்பனையாளா்களுக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் கோவிந்தராவ் அறிவுரையின்படி, திங்கள்கிழமை முதல் தளா்வில்லாத முழுப் பொது முடக்கம் அமலில் உள்ள வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை அனைத்து தனியார் உரம், பூச்சி மருந்து, விதை விற்பனை நிலையங்கள் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே ஆட்சியரின் அறிவுரையின்படி கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து விவசாயிகளுக்குத் தேவையான உரம், பூச்சி மருந்து, விதைகளை விற்பனை செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்