தஞ்சை சூலை : 15, தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது,
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிற்கு புறம்பாக அணை கட்டப்படுவதை கண்டித்தும் இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் உண்ணாவிரதம் நடைபெற்றது.

சட்டத்திற்குப் புறம்பாக நீர்வளத்துறை அமைச்சர் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கேட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது, அதனை திருப்பி அனுப்ப வேண்டும். மத்திய அரசு ராசி மணலில் அணை கட்ட தமிழகத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும், தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தண்ணீரின்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பா சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

உடனடியாக கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெற்றுத் தரவேண்டும். அணைகள் நீர் நிர்வாகத்தை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகரிப்பதோடு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வர் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சரையோ, இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரையோ சந்திப்பதால் எதுவும் ஆகப் போவது கிடையாது. குடியரசு அரசு தலைவரை சந்தித்து அழுத்தம் கர்நாடக அரசு தர வேண்டும்.

குடியரசு தலைவர் தலையிடாமல் இருந்தால் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் மீதும் குடியரசு தலைவர் மீதும் உச்சநீதிமன்றத்தில் சட்டப்படி அவசர வழக்கு தொடர வேண்டும். அவசியம் அழுத்தம் கொடுக்க வேண்டும் . விரைந்து குறுவை சாகுபடி ,சம்பா பயிர்க்கு தண்ணீரை பெற்று தர வேண்டும்.தமிழக முதல்வர் அரசியல் அழுத்தம் கலந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் .தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் என பி ஆர் பாண்டியன் தெரிவித்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/