தஞ்சை சூலை 09: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நடைபெற்ற லயன்ஸ் சங்க பணி ஏற்பு விழாவில் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் லயன்ஸ் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா நடந்தது. முன்னாள் தலைவர் பொறியாளர் இளங்கோ தலைமை வகித்தார். முதலாம் துணை ஆளுநர் சேது சுப்பிரமணியன் புதிய பொறுப்பாளர்களை பணியில் அமர்த்தி வாழ்த்திப் பேசினார்.

முன்னாள் மாவட்ட ஆளுநர் முகமது ரஃபி புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தும், சேவைத் திட்டங்களை துவக்கி வைத்தும் உரையாற்றினார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சங்க நிர்வாகிகள் செல்வராஜ், மணிகண்டன், செந்தில்குமார், பொறியாளர் கனகராஜ், நீலகண்டன், செய்யது அகமது கபீர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சங்க புதிய தலைவராக, பாலசுப்ரமணியன், செயலாளராக கோவிந்தன், பொருளாளராக முத்துக்குமார், நிர்வாக அலுவலராக பெருமாள் ஆகியோர் பதவியேற்றனர். விழாவில் பயனாளிகளுக்கு தையல் மெஷின், சலவைப்பெட்டி, விவசாயக் கருவிகள், அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் கல்வி உதவித்தொகை என ரூ.1 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை முன்னாள் செயலாளர் பழனிவேல், பொருளாளர் பன்னீர்செல்வம், நிர்வாக அலுவலர் சந்தோசம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/