தஞ்சாவூர் செப்.19- வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தஞ்சையில் 195 இடங்கள் ஆபத்தான இடங்கள் என கண்டறியப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தஞ்சை மாவட்டம் தயார் நிலையில் உள்ளது என்பதை செயல்முறை விளக்க நிகழ்வில் கலந்துகொண்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் ஆற்றில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடைமுறை தொடர்பான செயல் முறை விளக்கம் வருவாய் மற்றும் பேரிடர் மீட்புக் குழு சார்பில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நடைபெற்றது.

மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பிளாஸ்டிக் குடங்கள், கொப்பரை தேங்காய் வாழை மரம் தெர்மாகோல் உள்ளிட்ட பொருட்களை இலகுவாக பயன்படுத்தி வெள்ளத்தில் இருந்து தப்பித்து கரை ஏறுவது எப்படி என செயல்முறை விளக்கத்தை தீயணைப்பு படை வீரர்கள் செய்து காட்டினர்.

தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு முன்னேற்பாடு பணிகளுக்கான தயாராக இருக்கும் உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தஞ்சை மாவட்டத்தில் 195 இடங்கள் ஆபத்தான இடங்கள் என கண்டறியப்பட்டு முன்னேற்பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக கூறினார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தஞ்சை மாவட்டம் தயாராக இருப்பதாக தெரிவித்து ஆட்சியர் தற்பொழுது கொரோனா ஊரடங்கு காலத்திலும் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் குடும்பமாக ஆற்றங்கரைக்கு வருவதாகவும் தற்பொழுது இதுபோன்று பொதுமக்கள் ஆற்றங் கரைக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/