தஞ்சாவூர் நவ 10- தஞ்சை மாவட்டத்தில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய 45,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு இவ்வாறு விஜயகுமார் கூறினார் தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசு முதன்மை செயலாளருமான விஜயகுமார் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சை திருவையாறு பாபநாசம் கும்பகோணம் ஆகிய ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார் தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருவையாறு ஊராட்சி ஒன்றியம் விளாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம் வில்லியநல்லூர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் ஊராட்சியில் வாரியம் மூலம் தஞ்சை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் குழாய் அமைக்கும் பணி வீரமாங்குடி ஊராட்சியில் கொள்ளிடம் கரையை மணல் மூட்டைகள் கொண்டு பலப்படுத்தும் பணி ஆகியவற்றை கண்காணிப்பு அலுவலர் உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கோவிந்த நாட்டு செய்தி மண்ணியாறு தலைப்பு மற்றும் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது கும்பகோணம் ஒன்றியத்தில் பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள கொத்தங்குடி ஊராட்சி குடிதாங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் அனைதலையூர் ஆட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார் பல வந்தான் கட்டளை ஊராட்சிமன்ற அலுவலக வளாகம் தஞ்சை மாரியம்மன் கோவில் ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் களுக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் கூறுகையில் தஞ்சை மாவட்டத்தில் 640 ஏரிகள் உள்ளன இந்த ஏரிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது வெள்ள பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள 95 பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆற்றங் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஆறுகள் ஏரிகள் தண்ணீர் அதிகம் இருப்பதால் மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவாய் கோட்ட அலுவலகம் தாசில்தார் அலுவலகங்களில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய 45,145 மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது இன்னும் தேவையான அளவு மணலை குவித்து வைத்துள்ள மழைக்காலங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தார் பாதிப்பு ஏற்படாத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த மரங்கள் அறுக்கும் எந்திரம் பூக்களின் எந்திரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் 1500 க்கும் மேல் தயார் நிலையில் உள்ளது என்றார் ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப் பிரியா கூடுதல் கலெக்டர் சுகப்புதரா ( வருவாய்) ஸ்ரீகாந்த் (வளர்ச்சி) பயிற்சி கலெக்டர் கவுசிக் கோட்டாட்சியர் ரஞ்சித் லதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/