தஞ்சை மே 28: தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் நாளை சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையா்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூா், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பா்நத்தம், அருந்தவபுரம், காட்டூா், வாளமா்கோட்டை, ஆா்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுளிகுடிகாடு, நார்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூா்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது’ .

இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் நல்லையன் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்