தஞ்சை ஜன 28 தஞ்சையை அடுத்துள்ள பூண்டி மற்றும் ராகவா அம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 30-ஆம் தேதி நடைபெறுகிறது இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை கீழ்கண்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பூண்டி சாலியமங்கலம், திருபுவனம், நத்தம், குடிகாடு, செண்பகபுரம், வள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை ரங்கநாதபுரம் சூலிய கோட்டை கம்பர் நத்தம் அருந்தவபுரம் காட்டூர், வாளமர்கோட்டை ஆர்சுத்திப்பட்டு, அழுமலைக்கோட்டை, மேல கொருக்கப்பட்டு சின்ன புலி குடிக்காடு, நார்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தி அம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார் கோயில், துறையுண்டார் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது, என்பதை சாலியமங்கலம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை