தஞ்சை மே 26 மூன்று நாட்கள் தொடர்ந்து மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், தஞ்சையில் பல பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாளை வியாழக்கிழமை அதாவது 27 ஆம் தேதி பின்வரும் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது யாகப்பா நகர், அருளானந்த நகர், அருளானந்த அம்மாள் நகர், பிலோமினா நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜ் நகர், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜே ஜே நகர், டி பி எஸ் நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், கரம்பை, சாலை கார தெரு, ராவுத்த பாளையம், பழைய பேருந்து நிலையம், கொண்டி ராஜபாளையம், பழைய மாரியம்மன் கோவில் சாலை, செக்கடி சாலை, மேல் அரங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது.

இருபத்தி எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று எஸ் இ ஆபீஸ், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், தென்றல் நகர், துளசியா புரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, கீழவாசல், பர்மா பஜார், ஜுபிடர் தியேட்டர் சாலை, எஸ்என்எம் ரகுமான் நகர், அரிசி கடை தெரு, கொள்ளு பேட்டை தெரு, ஆட்டு மந்தை தெரு, வாடிவாசல் கடைத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

29 ஆம் தேதி சனிக்கிழமை திருச்சி சாலை, வ உ சி நகர், பூக்காரத் தெரு, 20 கண் பாலம், கோரி குளம், புதிய பேருந்து நிலையம், ஆர் ஆர் நகர், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கருப்ஸ் நகர், ஏடிபி அழகம்மாள் நகர், பரிசுத்த அருள் வனம், இனத்துக் கான்பட்டி, கார்கில் நகர், ரயில் நகர், அர்ஜுன் நகர், விவேகானந்தர் நகர், லட்சுமி காலனி, நடராஜபுரம் வடக்கு, ஸ்டேட் வங்கி காலனி, தோப்பு குளம், மனோஜிபட்டி சாலை, ரெட்டிபாளையம் சாலை, முனிசிபல் காலனி, முத்தமிழ் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

மேலும் மின்தடை குறித்த விவரங்களுக்கு பொதுமக்கள் 1912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை