தஞ்சாவூா் செப் 15: தஞ்சாவூரில் நாளை வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த சிறுபான்மையினா் ஆணையக் குழுவின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழு தலைவரின் தலைமையில் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நாளை வியாழக்கிழமை நடைபெற இருந்தது.
உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து தேதி குறிப்பிடப்படாமல் இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/