தஞ்சாவூர் செப் :2- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது பட்டுக்கோட்டை கோட்டத்தில் வரும் 7-ஆம் தேதி காலை 11.30,மணி அளவில் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு காணும் நேரடி முகவர்களை தேர்வு செய்யும் நேர்காணல் நடைபெற உள்ளது.

ஆர்வமுள்ள அனைவரும் வரும் 7ஆம் தேதி 11.30 மணி அளவில் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் வளாகத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தில் தங்களுடைய வயது சான்றிதழ் கல்வி சான்றிதழ் ஆதார் அட்டை பான் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நேரடி முதலாக விரும்புவோர் குறைந்தது வயது 18 முதல் 50-க்குள் இருக்க வேண்டும் மற்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் முகவர்களாக இருக்கக்கூடாது, தேர்வு செய்யப்படும் நேரடி முகவர்கள், பட்டுக்கோட்டை கோட்டப்பகுதிகளில் பணிபுரிய வேண்டும் பாதுகாப்பு வைப்பு கட்டணமாக ரூபாய் 5000 அவர்களின் பெயரில் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் எடுக்க வேண்டும்.

மேலும் உரிமக் கட்டணம் ரூபாய் 50 செலுத்தவேண்டும் தேர்ந்தெடுக்கப்படும் நேரடி முகவர்கள் அவர்கள் செய்யும் அவனை கட்டிப்பிடித்து ஏற்ப அல்லது மறந்தவர்களுக்கு பட்டுக்கோட்டை அஞ்சல் ஆயுள் காப்பீடு வளர்ச்சி அலுவலரை 866768036 7 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/