பொங்கல் பரிசு தொகுப்புகள் பைகளில் அடைக்கும் பணி தீவிரம் தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்கப்படுகிறது இதில் பணமாக 2,500 ரூபாயும் மற்றும் சர்க்கரை முந்திரி திராட்சை போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒரு முழு கரும்பும் வழங்கப்படும்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 67 ஆயிரத்து 941 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதற்காக வீடுவீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது, இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் இந்த பரிசு தொகுப்புகள் பேக் செய்யப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்புகள் வெட்டி எடுக்கப்பட்டு டிராக்டர் மினி லாரிகளில் தஞ்சைக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது, இந்த பொங்கல் பரிசு நாளை முதல் வினியோகம் செய்யப்பட இருக்கிறது ஒவ்வொரு நாளைக்கும் 200 பேருக்கு இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

குறிப்பிட்ட தேதியில் பொங்கல் பரிசு பெறாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13ஆம் தேதி பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 100 மில்லி கிராம் ஆவின் நெய்யும் வழங்கப்படும் என தெரிகிறது.

செய்தி : ம.செந்தில்குமார்.