தஞ்சாவூர் ஜன 5, தஞ்சை ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பணத்துடன், பச்சரிசி சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, முழுநீள கரும்பு, ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பை வழங்கப்பட்டு வருகிறது, தஞ்சாவூரில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
அதன்படி தஞ்சை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் தலைவர் பண்டரிநாதன் வரவேற்று பேசினார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மனோகரன் விளக்க உரையாற்றினார் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வைத்திலிங்கம் எம் பி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பையை வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில் மாவட்ட கலெக்டர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது, நாட்டின் உயிர்நாடி விவசாயம் மட்டும்தான் அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் உணவு உண்ண முடியும், மரியாதையான தொழில் என்றால் அது விவசாயம் தான் அப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த விவசாயிகள் சந்தோசமாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணப்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளார், அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடுங்கள் என்றுப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி பரசுராமன் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துறை திருஞானம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் காந்தி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், துணை மேயர் மணி கண்டன், நிலவள வங்கி தலைவர் துறை வீரன் நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி ஒருங்கிணைந்த மாவட்ட கூட்டுறவு அச்சகம் தலைவர் புண்ணியமூர்த்தி நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி துணை தலைவர் சரவணன் மொத்த கூட்டுறவு பண்டகசாலை துணைத் தலைவர் ரமேஷ் முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சாமுவேல் கல்வி கடவுளர் கலியமூர்த்தி மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனி ஈஸ்வரி சரக துணை பதிவாளர் குமார சுந்தரம் பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் ஆறுமுகப்பெருமான் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் இளைஞன் அம்மா பேரவை இணைச் செயலாளர் பாலுறவில் முன்னாள் கவுன்சிலர் வாணி தாரணி ராஜா அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்