தஞ்சாவூர் ஜன:13,தஞ்சை மாவட்டம் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இந்த மழையினால் பொங்கல் பண்டிகைக்கு வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது கிராமங்களிலிருந்து மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வாழை இலை, வாழை தார், மண்பானைகள், கரும்பு,காய்கறிகள் மளிகை சாமான்கள், ரோட்டோர தரைக்கடை வியாபாரிகள் வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து வந்து பொருள்களை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் இதே நிலை நீடித்தால் பணம் கொடுத்து வாங்கிய அசல் கூட கிடைக்காத நிலை ஏற்படும் என்று சிறு குறு வியாபாரிகள் கூறுகிறார்கள் செல்லும் கூலித் தொழிலாளிகள் வேலை இல்லாமல் இந்த பொங்கலை எப்படிக் கொண்டாடப் போகிறோம் என்று மனவருத்தத்துடன் உள்ளன இந்த மழை தொடர்ந்து பெய்தால் முழுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனையுடன் கூறினார்கள்,