தஞ்சாவூர்,ஜன.6-தஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி 2022-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். தஞ்சை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ் நங்கை வரவேற்றார்.

தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி தி.மு.க. மகளிர் அணி மாநில துணை தலைவர் காரல் மார்க்ஸ் திமுக வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் காரல் பாலாஜி தமிழ் ப்பல்கலைக்கழக இளங்கோவன் வட்டாட்சியர் மணிகண்டன், ஜே.ஆர்.கே.பள்ளி நிர்வாகி பி.தர்மராஜன் 51-வது வார்டு செயலாளர் ஞானசெல்வம் இணை செயலாளர் செழியன் பொருளாளர் மோகன் ராஜ் பிரதிநிதிகள் பிரேம்குமார், ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் வி.பண்டரிநாதன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பண்டகசாலை மேலாண்மை இயக்குநரும் கூட்டுறவு த்துறை துணை ப்பதிவாளருமான தயாள் விநாயகம் தலைமையில் அரசு அதிகாரிகள் பண்டகசாலை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் ஆணைப்படி தமிழகத்தில் இன்று 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொகுப்பில் அடங்கியுள்ள 21 பொருட்கள் அனைத்தும் தரமானது. இதற்காக முதலமைச்சருக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்வோம். 15-18 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு வரவுள்ளது. இதை கருத்தில் கொண்டு தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 15-18 வயது வரையிலான பள்ளி, கல்லூரி செல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/