தஞ்சை ஜன: 10, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை இடித்ததை கண்டித்து அனைத்து கட்சி அமைப்புகள் சார்பில் தஞ்சையில் ரயிலடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி அய்யனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன் கண்டன உரையாற்றினார்.
நினைவு சின்னம் இடிக்கப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதின் நோக்கம் தமிழர் படுகொலைக்கு நியாயம் வேண்டும் என்று கேட்பவற்களுக்கெல்லாம் அதை மறுத்து தாங்கள் செய்ததே நியாயம் என்று தெரிவிக்கும் ஆணவச்செயலாகும்.
தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி கண்டனம் தெரிவிக்க வேண்டும் இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமித்துக் குரல் எழுப்பவேண்டும் மீண்டும் அதே இடத்தில் இலங்கை அரசால் அந்த நினைவுத் தூணை கட்டித்தர செய்ய வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி. நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் காளியப்பன்,ஐஜேகே தலைவர் சிமியோன் சேவியர் ராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஜெயனலாவுதீன்,தமிழ் தேச மக்கள் முன்னணி அருண்ஷோரி,மகஇக ராவணன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பி.கிருஷ்ணமூர்த்தி ந.பாலசுப்பிரமணியன் ஜி.கிருஷ்ணன் தொழிற்சங்கத் தலைவர்கள் சி.சந்திரகுமார் ஆர்.தில்லைவனம் பொறியாளர் கென்னடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இறுதியாக ஒருங்கிணைப்பாளர் துரை மதிவாணன் நன்றி கூறினார்.
க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்