தஞ்சாவூர் செப் :21- குற்றவாளிகள் மீது 3, அல்லது 4 வருடங்களில் எந்த வழக்கும் இல்லாவிட்டால் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பணியைத் காவல்துறை செய்து வருகிறது என தஞ்சை எஸ்.பி, ரவளி பிரியா காந்தபுனேனி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் காவல்துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் குற்றவாளிகள் மறுவாழ்வு முகாம் நடைபெற்றது இதில் எஸ்.பி. ரவளிப்பிரியா காந்தபுனேனி தலைமை வகித்து பேசியதாவது.

சிறு மற்றும் கொடுங் குற்றங்கள் புரிவது, போக்கிரித்தனம் செய்யும் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கி கொடுப்பது மட்டும் போலீசாரின் பணி அல்ல, அந்த குற்றவாளிகள் மீது 3, அல்லது 4. வருடங்களில் எந்த வழக்கும் இல்லாவிட்டால் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பணியையும் காவல்துறை செய்து வருகிறது.

குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்களாகவோ இருப்பர், இவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக ஏதாவது ஒரு திட்டத்தில் கடனுதவி பெற்று தரப்படும்.

கல்வி தகுதிக்கு ஏற்ப கடன் உதவி பெற ஏற்பாடு செய்யப்படும் கல்வி தகுதி இல்லாவிட்டாலும், நல்ல எதிர்கால திட்டம் இருந்தால் அதற்கு தேவையான உதவி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எந்த துறையில் உதவிகள் தேவைப் பட்டாலும் அதை காவல்துறையினர் செய்து கொடுப்பார்கள் இவ்வாறு அவர் பேசினார், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ராஜரத்தினம் மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் குணசேகரன் உதவி இயக்குனர் செல்வம் ஆகியோர் பேசினர்.

ஏடிஎஸ்பி ஜெயசந்திரன் வரவேற்றார், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நன்றி கூறினார். தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த 1997-ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த காவலர் காமராஜ் மறைந்தார் இதையடுத்து அவரது பிரிவில் காவலராக பணியாற்றிய காவல் நண்பர்கள் ஒன்றிணைந்து ரூ. 12.97, லட்சம் நிதி திரட்டினர், இந்த நிதியை தஞ்சை ரவளிப்பிரியா காந்த புனேனி மறைந்த காவலர் காமராஜ் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சக காவலர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மங்கையர்க்கரசி ராஜராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/