தஞ்சாவூர் அக்: 4. தஞ்சாவூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வழக்கறிஞர் .காமராஜ் அலுவலகத்தில் அத்துமீறி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் நுழைந்து பூட்டை உடைத்து பொருட்களை எடுத்து சென்றதாக புகார் கொடுக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த வாரம் கோர்ட் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று கோஷமிட்டனர் நிலையில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது இதனை கண்டித்து தஞ்சை மணிமண்டபம் அருகே ஏராளமான வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து திரண்டனர்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 33 வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்து செய்தனர். இந்த மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/