தஞ்சை ஏப்ரல் 25 தஞ்சை செல்போனை தட்டி பறித்துச் சென்ற மர்ம நபர்களை விரட்டிச் சென்ற பேராசிரியர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார், எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்தவர் ஜமால் முகம்மது பேராசிரியர் இவர் ரமலான் நோன்பு இருந்து வருகிறார், அதே பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று நோன்பை முடித்து விட்டு நோன்பு கஞ்சி வாங்கி கொண்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்,.

எலிசா நகர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென ஜமால் முகமதுவை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர், அவர்களை தனது மோட்டார் சைக்கிளில் ஜமால் முகமது விரட்டிச் சென்றார், முனிசிபல் காலனி பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது அந்த பகுதியில் கிடந்த குடிநீர் குழாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஏறியதாக தெரிகிறது.

இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜமால் முகமது படுகாயமடைந்தார் உடனே அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து ஜமால் முகம் ஆட்டோ மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே பைக்கில் சென்ற கணவன் மனைவியை பின் தொடர்ந்து தாலி செயினை அறுத்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி ஒடினர், ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் மேல மேட்டுப்பட்டி அருகில் பரமக்குடி அருகே உள்ள எல்லா விடுதியில் தொண்டைமான் தெருவை சேர்ந்தவர் கண்ணன் இவர் தனது மனைவி கோமதி மற்றும் குழந்தைகளுடன் ஒரத்தநாட்டில் உள்ள மாமனார் வீட்டிற்கு பைக்கில் சென்றார் மீண்டும் வீட்டுக்கு திரும்பினார்கள்.

பரமகுடி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது அவர்களை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் கோமதியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்ங்க தாலி சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்ப முயன்றபோது கழுத்தில் இருந்த செயினை கோமதி இறுக்கிப் பிடித்து கொண்டதில் பாதி செயின் மர்ம நபர்கள் கையில் சிக்கிக் கொண்டதால் தப்பி  சென்றனர்.

இது போன்ற வழிப்பறி இப்போது தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடை பெற்று வருவதால் மக்கள் பீதியுடன் உள்ளனர், இந்த ‍கொரோனா காலத்தில் கூட்டம் குறைவாக உள்ளதால், அதனை பயன்படுத்தி ஒரு கூட்டம் இந்த வழிபறிகளை செய்து வருகின்றது, இதனை விரைவில் கண்டறிந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் ‍கோரிக்கையாக உள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.