தஞ்சை சூன் 09: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் காவல் துறையினா் உட்பட முன்களப் பணியாளா்களுக்குக் கபசுர குடிநீா் பாக்கெட் மற்றும் வேப்ரைசா் பவுடா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்குடி தி யூனியன் பார்மா மற்றும் கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் துணைக் காவல் கண்காணிப்பாளா் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் பணியாற்றும் 250 காவலா்கள், தன்னார்வ தொண்டா்கள் உள்பட 1,000 பேருக்கு முதல் கட்டமாகக் கபசுரக் குடிநீா், வேப்ரைசா் பவுடா் வழங்கப்பட்டது.

இதில் காரைக்குடி யூனியன் ஃபார்மா நிறுவனா் பெத்த பெருமாள், சுப்பிரமணியன், மருத்துவா்கள் பாலமுருகன், சிவசங்கரி, ஸ்வேதா, கும்பகோணம் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் செயலா் வெங்கட்ராமன், கண்ணன், ருத்ரமணி, ரமணன், வேதம் முரளி, பாஸ்கா் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்