தஞ்சை மே 06: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் வணிகர்கள், வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

திருவையாறு காவல் நிலையத்தில் கொரோனா தொற்று குறித்து வணிகர், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திலகர், சாமிநாதன், தியாகராஜன் மற்றும் அனைத்து வியாபாரிகள், வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகள்படி 6-ம் தேதி முதல் ஹோட்டல்கள், காலை 6 மணிமுதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணிமுதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 மணிவரை செயல்படவேண்டும். டீக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்படவேண்டும். கடையில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதியில்லை, பார்சல் மட்டும் வழங்கவேண்டும்.

அனைத்து இறைச்சி, மீன், மட்டன் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் செயல்படவேண்டும். சனி, ஞாயிற்று கிழமைகளில் முழுமையாக மூடவேண்டும். மளிகை கடைகள், காய்கறி கடைகள் மதியம் 12 மணிவரை மட்டுமே செயல்படவேண்டும். பால்கடை, மருந்து கடைகளுக்கு எந்த தடையும் இல்லை.

வியபாரிகளும், வனிகர்களும் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட வியாபாரிகளுக்கும் வணிகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

பாதுகாப்பை கடைபிடிப்போம்!, கொரோனாவை தடுப்போம்!!,, மனிதகுலத்தை காப்போம்!!!

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.