தஞ்சாவூர்: தஞ்சை டிஐஜி அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தலைப்பில் காவலர் குறைதீர்க்கும் நாள் நடந்தது.

இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த டி.எஸ்.பி., ஒருவர், 8 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 47 போலீசார் என மொத்தம் அறுபத்தி மூன்று பேர் கலந்து கொண்டனர். பணியிடமாற்றம் தண்டனை குறைப்பு மற்றும் சம்பள பிரச்சினை உள்ளிட்ட தங்களின் குறைகளை தெரிவித்தனர்,

டிஐஜி பிரவேஷ் குமார், போலீசாரின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/