தஞ்சாவூர்அக் 09: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 63வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அரசு சார்பில், கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது மார்பளவு சிலைக்கு, சப்-கலெக்டர் பாலசந்தர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எழிலரசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதேபோல் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கவிஞரின் முழு உருவச் சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, நகரச் செயலாளர் சுதாகர், ரோஜா ராஜசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை, பொருளாளர் பக்கிரிசாமி, நிர்வாகிகள் சுந்தர், சுந்தரம், பாண்டியன், ஆகாஷ் கண்ணன், ஆம்பல் காமராஜ், கிருஷ்ணமூர்த்தி, ஞானசூரியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/