தஞ்சை ஜன.30, தமிழகத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது முன்னதாக தஞ்சை மேலவஸ்தாச் சாவடியிலிருந்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் மு க ஸ்டாலின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வடக்கு சங்கர் மேற்கு மாநகர செயலாளர் சரவணன் மாவட்ட தலைவர் தெரியவில்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊர்வலத்தில் உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் மாநில இளைஞரணி துணை தலைவர் விஜயராஜன் தலைமை நிலைய பேச்சாளர் தமிழ்செல்வனும் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசே வன்னியர்களை புறக்கணிக்காதீர்கள் உரிமையை புறக்கணிக்காது என்பன பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன ஊர்வலம் தஞ்சை திருச்சி சாலையில் தமிழ் பல்கலைகழகம் வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலை பூட்டிய போலீசார் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர் அந்த தடுப்புகளை கடந்து பாமகவினர் வன்னியர் சங்கத்தினர் செல்ல அனுமதிக்கவில்லை பின்னர் நிர்வாகிகள் 15 பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர் அவர்கள் கலெக்டர் கோவிந்தராவ் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் தமிழக மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கு மேல் வன்னியர்கள் அவர் ஆனால் கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 7 சதவீதம் கூட பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை குறிப்பாக குரூப்-1 பணிகளில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் 3 சதவீதம் கூட தாண்டவில்லை மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கையில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களின் பிரதிநிதித்துவம் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

எனவே வன்னியர் சங்கத்தின் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் இதற்கான ஆணையை அரசு உடனே பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது அப்போது போலீஸ் சூப்பிரண்டு சேகர் சஞ்சய் உடனிருந்தார் ஒரு படத்தை ஒட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

செய்தி க.சசிகுமார், நிருபர்,
தஞ்சை