தஞ்சாவூர் செப்.7- தந்தை பெரியார் பிறந்த நாளான செப்.17-ம் தேதி, சமூக நீதி நாளாக அறிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை “சமூகநீதிக்கான சரித்திர நாயகர்” என அழைப்பது மகிழ்ச்சி அடைகிறோம் என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியை சமூகநீதி நாளாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும் தலைமை செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அன்றைய நாளில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும், என அறிவித்திருப்பதும், “வரலாற்று சிறப்புமிக்க பிரகடனம்” இந்த உறுதி மொழியில் உள்ள வாசகங்கள் ஒவ்வொன்றையும் உயர்த்தும் வகையில் மிக அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம், தமிழக முதல்வரை “சமூகநீதிக்கான சரித்திர நாயகர்” என அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், மூன்றாம் அலைக்கான காண வாய்ப்புகள் இருப்பதால், பொது இடங்களில் கூட்டம் சேரக்கூடாது என ஒன்றிய அரசின் உள்துறை செயலர் அறிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு அறிவிப்பை தமிழ்நாடு அரசு மதிக்கிகிறது, அதனால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது ஆனால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு புதுச்சேரி அரசு அனுமதி அளித்து இருப்பதன் மூலம் ஒன்றிய அரசின் விதிகளை அந்த அரசு மீறியிருப்பது தெரியவருகிறது. ஒன்றிய அரசில் அவர்களது கட்சியே ஆட்சியில் இருந்தாலும் கூட ஒன்றிய அரசின் ஆணையை புதுச்சேரி அரசு மதிக்கவில்லை என்பது தெரிகிறது. இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/