24-டிசம்பர் தந்தைப் பெரியார் அவர்களின் நினைவு நாள், இந்த ஆண்டு தந்தைப் பெரியார் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகும்.

‍அண்மைக்காலமாக பெரியார் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது, சமூக ஊடகங்களிலும் பெரியார் குறித்தான பேச்சுக்கள், அவரது கருத்துக்கள் பரப்ப பட்டு வருவதைக் காண்கின்றோம்.

நேற்று தஞ்சையில் திராவிடர் கழகத்தின் சார்பிலும், மற்றும் பெரியாரியல் தொண்டர்களும் தந்தைப்பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.