பேராவூரணி: இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் பேராவூரணி தொகுதியில் வெற்றி சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்ப்பட்டது.
பேராவூரணி தொகுதியில் 315 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நேற்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் துறவிக்காடு, சென்னியவிடுதி, ஆகிய இரண்டு பகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன.
இதனால் இரண்டு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படாமல் முடிவு அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளா் இருபத்தி மூன்றாவது சுற்றில் 23,000 வாக்குகளுக்கும் அதிகமாக பெற்றிருந்ததால், அந்த இரண்டு இயந்திர வாக்குகளை எண்ணாமலேயே சான்றிதழ் பெற்று கொள்ளுமாறு தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக தலைமையிடம் வேட்பாளா் அசோக்குமாா் கேட்டபோது, வெற்றி சான்றிதழ் பெற ஒப்புதல் அளித்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஆனது. இதற்கிடையில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பழுது நீக்கம் செய்து வாக்குகளை எண்ணுமாறு பிற கட்சியினா் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.
முதலில் 88,373 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளா் அசோக்குமாா், 2 இயந்திரங்களின் வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகு 89,130 வாக்குகள் பெற்று முன்பைவிட 752 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றாா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்