தஞ்சாவூர் ஆக 31. சமையல் எரிவாயு விலையை பாதியாக குறைக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் இன்று தஞ்சையில் ஆர்ப்பாட்டம்! கடந்த 9 மாதங்களில் ஒன்றிய மோடி அரசு சமையல் எரிவாயு விலை ரூ 450 ஆக இருந்ததை ரூ 900 ஆக உயர்த்தியுள்ளது.

இது ஒட்டுமொத்த நாட்டின் பெண்கள் மீதான மோடியின் மற்றுமொரு தாக்குதல் ஆகும். உள்நாட்டிலேயே எரிவாயு உற்பத்தி நாட்டின் மொத்தத் தேவையில் 55 சதவீதம் தயாரிக்கப்படும் நிலையில் சமையல் எரிவாயு விலை உயர்வு என்பது கண்டிக்கத்தக்கதாகும் ரிலையன்ஸ், எஸ்ஸார், கெயின் போன்ற பகாசுர கார்ப்பரேட் கம்பெனிகள் இயற்கை வளங்களை இலவசமாக கொள்ளையடித்து, மக்களிடமும் கொள்ளையடித்து சுரண்டுகிறது.

கார்ப்பரேட் முதலாளிகளும், காவி பாசிச மோடி அரசும் ஒன்று சேர்ந்து பெட்ரோல் ,டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டலிரும் மக்களை கொள்ளையடித்து சுரண்டுகிறது . கேஸ் மானியம் ரூ 250 முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.

தொடர் விலை ஏற்றத்தால் கிராம மக்கள் மட்டுமல்ல நகர மக்களும் விறகு அடுப்புக்கு மாறிவரும் சூழ்நிலை உள்ளது. மக்களை சுரண்டி வசூலிக்கும் பணம் பல லட்சம் கோடி வரிச்சலுகையாக, வாராக்கடன் தள்ளுபடியாக அம்பானி, அதானிகளுக்கு மோடி அரசு வாரி இறைக்கிறது.

மீண்டுமொரு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை சொந்த நாட்டு மக்கள் மீது திணிக்கிறது. ஒன்றிய பாசிச மோடி அரசின் பெண்கள் மீதான, உழைக்கும் மக்கள் மீதான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், எரிவாயு விலை உயர்வை பாதியாக குறைத்திட வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மாநகர ஒருங்கிணைப்பாளர் தேவா தலைமை வகித்தார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநகரச் செயலாளர் ராவணன்,மக்கள் அதிகாரம் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரத்தில் மாநில பொருளாளர் காளியப்பன் , தமிழர் தேசிய முன்னணியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் அய்யனாபுரம் சி.முருகேசன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வெ.சேவையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் என்.குருசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன், மாநகரச் செயலாளர் ஜெ.ஷெரீப்.

மற்றும் மாநகர மகளிரணி அமைப்பாளர் எஸ்.அன்புக்கரசி, இந்திய ஜனநாயக கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் ச.சிமியோன் சேவியர் ராஜ் ,தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி,இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் எம்.பி நாத்திகன், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன சிறப்புரையாற்றினார்கள். முடிவில் மக்கள் அதிகாரத்தின் மாநகர நிர்வாகி. கே. அருள் நன்றி கூறினார் .

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/