தஞ்சாவூர் அக்,24 -தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதற்காக நான்கு இடங்களில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது மாநகரில் 501 வார்டுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர் இந்த உந்து நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சமுத்திரம் ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியை ஒட்டி உள்ள மாநகராட்சி பகுதிகளில் உள்ள தங்கும் அறைகளுடன் கூடிய ஓட்டல்கள் மற்றும் கடைகளில் அனுமதி இன்றி பாதாள சாக்கடை இணைப்பு பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் செயற்பொறியாளர் ஜெகதீசன் ஆகியோர் மாநகரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே நீலகிரி ஊராட்சி பகுதியில் உள்ள தங்கும் அறைகள் கூடிய இரண்டு ஹோட்டல்கள் மற்றும் மதுபான பாரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை இணைப்பு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது கடந்த எட்டு ஆண்டுகளாக அனுமதியின்றி இந்த பாதாள சாக்கடை குழாய்கள் இணைப்பு வழங்கப்பட்டு கழிவு நீர் வெளியேற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட்டதோடு சம்பந்தப்பட்ட இரண்டு ஓட்டல்கள் மற்றும் மதுபான பாரில் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார் அதன் பேரில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட பாதாளசாக்கடை இணைப்பை துண்டித்தனர்.

மேலும் எட்டு ஆண்டுகளாக அனுமதி இன்றி பாதாள சாக்கடை இணைப்பு பயன்படுத்தப்பட்ட ஒரு ஓட்டலுக்கு ரூபாய் 62 லட்சத்து 54 ஆயிரத்து 728 அவதாரம் மிதித்தனர் மற்றொரு ஓட்டலுக்கு ரூபாய் 44 லட்சத்து 20 ஆயிரத்து 632 அவதாரம் விதிக்கப்பட்டது மேலும் அனுமதியின்றி இணைப்பு பயன்படுத்திய மதுபான பார் உரிமையாளருக்கு ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரம் அராதாரமாக விதிக்கப்பட்டது, மொத்தம் ரூபாய் , 1 கோடியே 9 லட்சத்து 15 ஆயிரத்து 360 அபராதம் விதிக்கப்பட்டது மேலும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை இணைப்பு அனுமதி இன்றி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/