தஞ்சை ஏப்ரல் 29 கனகசுப்புரத்னம் என்ற இயற்பெயரைக் கொண்ட புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 130வது பிறந்தநாள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொரோனா காரணமாக அமைதியான முறையில் கொண்டாடப்படுகின்றது.

கவிஞர் பல்வேறு கவிதை மற்றும் கதைகள் எழுதினாலும் பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி போன்றவைகள் தமிழ்நாட்டு அனைத்து மக்களாலும் அறியப்பட்ட படைப்புகளாகும், பாரதிதாசன் மற்ற கவிஞர்களினின்று தனித்து நிற்பதற்கு காரணம், அவர் தமிழர்களின் எதிரி யார், அவர்களை எப்படி எதிர் கொள்வது என்பதை நேரிடையாக தனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தியவர்.

பாவேந்தர் வாழும் காலத்திலும் அதற்கு பின்பும் ‍அவரது கவிதைகள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன, அவரது சங்கே முழங்கு என்கிற திரைப்பட பாடல் இன்றும் தமிழ்நாட்டின் எதோ ஒரு மூலையில் ஒலிப்பதை காணலாம், அண்மையில் அவளும் நானும் அமுதும் தமிழும் என்ற பாடல் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளி வந்தது அவர் என்றும் உயிர்ப்புடன் உள்ள கவிஞர் என்று காட்டியது.