பட்டுக்கோட்டை மே 10: கொரோனாவால் பாதிக்கப்பட்டு பட்டுக்கோட்டையில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட வி பாலகிருஷ்ணன் (60) என்பவர் பலியானார்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு 23,771 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் வி. பாலகிருஷ்ணன். இவர் பட்டுக்கோட்டை வட்டம் சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த பாலகிருஷ்ணனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.