தஞ்சை சூன் 14: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கொரோனா தடுப்பூசி முகாமினை எம்எல்ஏ அண்ணாதுரை துவக்கி வைத்தார்.

பட்டுக்கோட்டை பாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில், நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமினை எம்எல்ஏ அண்ணாதுரை துவக்கி வைத்தார். முன்னதாக, தடுப்பூசிக்கான டோக்கன் பெறுவதற்காக காலை முதலே பொதுமக்கள் அதிகளவில் கூடியிருந்தனர்.

இந்நிலையில், 18 லிருந்து 45 வயதில் உள்ள 200 பேருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட 200 பேருக்கும் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. வெகு நேரமாக காத்திருந்து கிடைக்காமல் பொதுமக்கள் விரத்தியுடன் திரும்பி சென்றனர்.

நகராட்சி துப்புரவு அலுவலர் அந்தோணி ஸ்டீபன், டாக்டர் பாலமுருகன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்